சங்க இலக்கியத்தில் குடும்ப உருவாக்கம்
முன்னுரை
சமுதாயம் பல்வேறு அமைப்புகளையும் படிநிலையையும் உடையது. சமுதாயத்தின் அடிப்படைக்
கூறான குடும்பமே தொன்மையானது. இது எல்லாக் கால சமுதாயம் சார்துந்ததாகவும் பல்வேறு வகைப்பட்ட
பரிணாமங்களைக் கொண்டதாகவும் உள்ளது. பொருளாதாரத்தை அடிப்படையாக் கொண்டு உருவானக் குடும்பம்
சங்க காலத்தில் இமைப்புற்றிருந்த நிலையை ஆராய்வதே இக்கட்டுரையின் கொக்கமாக உள்ளது.
குடும்பம்
வரையறை
“குடும்பம் என்பது இயக்கமுள்ள கோட்பாட்டைக் குறிக்கிறது. அது
எப்போதும் இயங்க்க்கொண்டே இருப்பது. சமூகம் கீழ் நிலையிலிருந்து மேல் நிலைக்கு முன்னேறும்
போது குடும்பம் முன்னேறுகிறது. இரத்த உறவு முறைகள் இயங்காதவை. குடும்பம் தீவீரமாக மாற்றம்
அடைந்தால் மட்டும் உறவு முறைகளும் மாற்றம் பெறுகின்றன.” என்று குடும்பத்தின் மாற்றம்
குறித்து மார்க்கன் வரையறை செய்கிறார்.
மந்தை
நிலை
விலங்குகளிடையே பார்க்கக் கூடிய உன்னதமான
சமூகக் குழு மந்தை. இது குடும்பத்தை உள்ளடக்கியதாகத் தோன்றலாம். ஆனால் இரண்டும் முரண்பட்டது.
குடும்பம் வளர்ந்தால் மந்தை சுரங்கும். மந்தை வளர்ந்தால் குடும்பம் சுரங்கும்.
குடும்பம் நெருக்கமாக பிணைக்கப்படும்
போது மந்தையின் விதிகள் மாற்றம் பெற்று இறுக்கப்படுகின்றன. மாறாக வரையறையற்றப் புணர்ச்சியும்
பலதார மணமுறையும் நிகழுமிடத்தில் மந்தை தானாகவே சேர்கிறது. இதில் குடும்ப உறவுகள் தளர்க்கப்படுகிறது.
தனிப்பட்ட சுதந்திரம் நிலவுகிறது.
புறா – குடும்பம்.
விலங்குகள் – மந்தை நிலை
தனி விலங்குகள் ஐக்கியமாவதில்லை. காரணம்
குடும்பத்தின் கூட்டு உணர்ச்சி மந்தையின் உணர்ச்சிக்கு எதிரானது என்று டெய்லன் கூறுகிறார்.
விலங்குகள் குடும்பத்தில் ஒரே ஒரு ஆண்
விலங்கு மட்டுமே நிலவ முடியும் பொறமை குடும்பத்தின் பந்தத்தையும் வரம்புகளையும் குறிக்கிறது.
குடும்பத்தை மந்தையுடன் சச்சரவு செய்கிறது.
வரையறையற்ற புணர்ச்சியில் தனிநபர்களின்
விருப்பு வெறுப்புகள் நசுக்கப்படுகின்றன. ஆகவே விபச்சாரம்தான் (வரையறையற்ற புணர்ச்சி)
மிகவும் உண்மையான வடிவமாகும் என்று வெஸ்டர் மார்கன் குறிப்பிடுகிறார்.
இரத்த
உறவுக் குடும்பம்
இது குடும்பத்தின் முதல் கட்டம் - திருமணம்
புரிகின்ற மக்கள் தலைமுறை வரிசையில் வைக்கப்பட்டுள்ளன.
ü
தாத்தா,
பாட்டி - தாய,; தந்தை - மகன், மகள் - கொள்ளு பேரன், பேத்தி
ü
இதில்
பெற்றோரும் குழந்தைகளும் திருமண உறவிலிருந்து விலக்கப்படுகின்றனர்.
ü
சகோதரன்
சகோதரிகள் - ஒன்று விட்ட சகோதர சகோதரிகள் இடையே திருமணம் புரிதல், புணர்ச்சியில் ஈடுபடுதல்
சகஜமாக இருந்தது.
ü
இவர்கள்
ஒரு இணை சகோதரன் சகோதரிகளாக இருப்பர். அவர்களுக்கிடையிலான ஒவ்வெரு தலைமுறையினரும் சகோதர
சகோதரிகள் கணவன் மனைவியாக இருப்பர்.
ü
இன்றும்
ஹவாய்த் தீவு, பாலூனீஸியா முழுவதும் இம்முறை நிலவுகிறது.
இரத்த உறவுடையவர்கள் அதாவது ஒருதாய் வயிற்றில்
பிறந்தவர்களாக இருக்கும் ஆண் பெண் எனும்இருவருக்கும் இடைப்பட்ட புணர்ச்சி முறை அடிப்படையில்
அமைவது இந்த இரத்த உறவுடைய குடும்பம். பாட்டன் பாட்டி தாய் தந்தை சகோதரன் சகோதரி பேரன்
பேத்தி என்னும்இவர்கள் பொது நிலையில் உடன் பிறந்தவர்களாக சகோதரன் சகோதரிகளாக இருக்கின்ற
காரணத்தினாலே இவர்களுக்கிடையே கணவன் மனைவியாக உறவு இருந்தது.
சகோதர சகோதரிகளும் ஒன்றுவிட்ட இரண்டு
விட்ட மூன்று விட்ட சகோதர சகோதரிகள் எல்லாரும் பரஸ்பரம் சகோதர சகோதரிகள். அதனால் கணவன்
மனைவியரும் சகோதரன் சகோதரிகளாகவெ இருந்தனர்.
இரத்த உறவுக் குடும்பம் மனித அனத்தில்
தோன்றிய முதல் குடும்ப முறை. அதனால் சகோதர சகோதரி இரத்த வழியுடைய கிளைவழி சகோதர சகோதரி
ஆகியோற்கிடையே மண முறை ஏற்பட்டது என்று பக்தவச்சல பாரதி குறிப்பிடுகிறார்.
பூனலூவா
குடும்பம்
ஹாவாய் மொழிச் சொல்லான பூனலூவாகுடும்பம்
என்பதற்குக் குழுமணம் என்பது பொருளாகும்.
ஓர் இரத்தக் குழுவைச் சார்ந்த சகோதர சகோதரிகளைத்
திருமணம் செய்து கொள்ளும் முறையில் குழுமண குடும்பங்கள் தோன்றின என்று பக்தவச்சல பாரதி
பூனலூவா குடும்பம் தோற்றம் பற்றிக் கூறுகிறார்;.
பூனலூவா
குடும்பத்தின் சிறப்புகள்
Ø முதலில் பெற்றோர் - குழந்தைகளுக்கிடையிலான
உடலுறவினைத் தவிர்த்தல்.
Ø இரண்டாவது சகோதர சகோதரிகளுக்கிடையிலான
உடலுறவினைத் தவிர்த்தல்.
Ø ஒரு குறிப்பிட்ட குடும்ப வட்டத்திற்குள்
இருக்கின்ற எல்லா கணவன்மார்களுக்கும் மனைவிமார்களுக்குமிடையே பொதுவான உறவு நிலவியது.
Ø ரத்த சம்பந்தமுள்ள பிற தாய் பிறந்த ஒன்று
விட்ட இரண்டு விட்ட சகோதர சகோதரிகளாக இருந்தனர்.
Ø கணவன்மார்களின் சகோதரிகளுகுமிடையே உடலுறவு
தவிர்க்கப்பட்டது.
Ø இங்குதான் மருமகன் மருமகள் உறவு முறைத்
தோன்றியது.
Ø இந்த முறை ஹாவாய் தீவுகளில் காணப்பட்டதாக
ஸ்பெனிலிருந்து அமெரிக்காச் சென்ற பாதிரியார் குறிப்பிடுகிறார்.
Ø பிரிட்டானியர்கள் 10,12 ஆண்கள் ஒரு பெண்ணைப்
புணர்வதாகவும் அவர்கள் அனைவரும் ஒரு தாய் வயிற்றில் உடன் பிறந்தவர்களாக இருக்க இயலாது
என்றும் அவர்கள் ஒன்று விட்ட இரண்டு விட்ட சகோதரர்களாகவே இருக்க வேண்டும் என்று அவர்
குறிப்பிடுகிறார்.
Ø மேலும் அவர் பெற்றோர் குழந்தைகள் சேர்ந்து
புணர்ச்சியில் ஈடுபட்டதாக கூறுகிறார். இது இரத்த உறவு முறை குடும்பத்தின் எச்சமாக விளங்குவதைக்
காட்டுகிறது.
Ø பூனலூவா குடும்பத்தில் உள்ள குழந்தைகள்
தந்தை யார் என்பதை அறுதியிட்டச் சொல்ல இயலாது. ஆனால் தாயை மடடும் நன்கு அறிந்திருந்தனர்;.
Ø குழந்தைகள் பல பெண்களை தாய் என்று அறிந்திருந்தாலும்
தன் குழந்தை எது என்பதை தாய் நன்கு அறிந்திருந்தாள்.
தாய்வழிச் சமூகங்களில் குழந்தையின் தந்தை
இரண்டாம் தர உறவினராகவே உள்ளார். அவரைக்குறிப்பதற்குத்
தனி உறவுச்சொல் இருப்பதில்லை அவ்வப்போது மனைவியகத்திற்குப் பார்வைக்கணவராக வந்து செல்லும்
அவரை அங்குள்ள தாய் வழிக் கூட்டத்தார் குழந்தைகள் பெயரைக்கொண்டே அழைப்பார்கள் இத்தகைய
சேய் வழி அழைத்தல் முறையின் எச்சங்களை சங்க இலக்கியத்திலம் காணமுடிகிறது.
ஐயை தந்தை (அகம் - 6)
அகுதை தந்தை (அகம் - 96)
ஆதன் தந்தை (புறம் - 67,71)
சேந்தன் தந்தை (குறுந் - 258)
மைந்தர் தந்தை (புறம் - 340)
இளையோன் தந்தை (புறம் - 341)
இதில் தாய் மூலமாக மட்டுமெ பரம்பரையை
அங்கீகரிப்பதையும்அதிலிருந்து காலப்போக்கில் தொன்றிய வாரிசுஉறவுகளையும்தாயுரிமை எனலாம்.
பூனலுவா குடும்பத்திலிருந்த தாயுரிம சகூகம்பிரிந்ததாக
மார்க்கன் குறிப்பிடுகிறார்.
தமிழகத்தில் பதினெட்டுக்கும் மேற்பட்ட
தாய் வழி சமூகங்கள் உள்ளன.
தமிழகச் சூழலில் தாயாட்சி தூக்கியெறியப்பட்டதன்
தொடக்கம்கூட நம்மிடம் ஒரு பண்ணாட்டு ஆவணமாக பதிவாகியுள்ளது.
பிறக்கும் குழந்தைக்கு ஆணும் காரணம் என்று
உணர தலைப்பட்டதே ஆண்மையச்சமூகத்தின் தொடக்கமாகும்.
பிரசவ காலத்தில் மனைவிபடும் துன்பத்தைத்
தானும் அனுபவிக்கும் பாவனை வேதனை முறையைக் கடைபிடித்தது பிறக்கும் குழந்தைக்குத் தானும்
காரணம் என ஆண் சமூகம் உணர முயன்றதைக் குறிக்கிறது.
கணவன்மார்கள் பேறுகாலத்தில் மனைவி பக்கத்திலேயே
இருந்து துன்பங்களை அனுபவிக்கும் முறையானது தமிழர்களின் தொல்குடிகளில் ஒன்றான குறவர்களிடம்
இன்றும் காணப்படுவதை
“குறத்தி பிள்ளை பெற குறவன் மருந்து திண்பான்” என்ற பழமொழி சுட்டிக்காட்டுகிறது.
ஆண்மையச் சமூகத்தின் தொடக்கமாக அமையும்
இப்பழக்கம் தென்னிந்தியாவிலுள்ள பல சமூகங்களில் இருந்ததை “தென்னிந்திய இன வரைவியல்” என்ற நூலில் எட்கர் தஸ்டன் என்பவர் கூறியுள்ளார்.
இணைக் குடும்பம் (இரத்த உறவற்ற திருமணம்)
சகோதர சகோதரிக் குழுக்கள் பெருகின. இரத்த
உறவு முறை திருமணச் சட்டங்கள் இவர்களுக்கிடையிலான திருமணத்தைத் தடை செய்தது. இதனால்
குழுமணம் கைவிடப்பட்டு இணைக்குடும்பம் ஏற்பட்டது.
இந்த இணைக்குடும்பத்தில் திருமணம் ஒவ்வெரு
இணைக்குழுக்களுக்கிடையே நடைபெற்றது. இரு தரப்பினரும் தீமண உறவினை சுலபமாக விலக்கிக்
கொள்ளும் உரிமை பெற்றிருந்ததாக மார்க்கன் குறிப்பிடுகிறார்.
இந்த உறவில்லாத குலங்களுக்கிடையே நடக்கும்
திரமணங்கள் உடலிலும் உள்ளத்திலும் வலிமை மிக்க மக்களைப் படைப்பதற்கு உதவின. இரண்டு
குழுக்கள் இணையும் போது புதிய மண்டையும் மூளையும் இரண்;டு குழுக்களின் திறமையும் விரிவடைந்தது.
முதலில் நெருங்கிய உறவினர்களையும் பிறகு
தூர உறவினர்களையும் விலக்கி வைத்து குழு மணத்தின் உவ்வெரு வடிவமும் நடைமுறையில் இல்லாதபடி
செய்யப்பட்டது. முடிவில் ஒரே ஒரு குடும்ப தாம்பத்திய இணைதான் மிஞ்சியது.
இந்த இணைக் குடும்பத்தில்தான் களவு முறைத்
திருமணம், விலைக்கு வாங்குதல் மூலமாக ஏற்படும் திருமணம் (பரிஷம் போட்டு திருமணம் செய்தல்)
ஆகியவை ஏற்பட்டன. விலைக்கு வாங்குதல் மூலமாக ஏற்படும் திருமணத்தில் திருமண ஏற்பாடுகள்
சம்பந்தப்பட்ட ஆண் பெண் இருவரிடமும் கலந்து கொள்ளாமல் முடிவுகள் எடுக்கப்பட்டன.
இதில் முற்றிலும் அறிமுகமில்லாத இருநபர்களுக்குமிடையில்
நிச்சயதார்த்தம் ஏற்பட்டு திருமண நாள் தெருவிக்கும் போது மட்டுமே மணமக்கள் இருவர்க்கும்
மணமக்கள் யார் என்பதை தெரிவிக்கப்பட்டது. இத்தகைய திருமண முறையில் திருமணத்திற்கு முன்
மணமகளின் உறவினருக்கு மணமகன் பரிசு அளிக்கிறான்.
“கற்பெனப்
படுவது கரணமோடு புணர
கொள்குரி
மரபின் கிழவன் கிழத்தியை
கொடைக்குரி
மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே”
(தொல்.கற்பு. 01)
என்ற
தொல்காப்பிய கற்பியல் நூற்பா தமிழ் மரபில் இருந்த இணைக்குடும்ப வாழ்விற்குச் சான்றாக
அமைகிறது.
சங்க இலக்கித்திலும் ஆண் பெண் வீட்டாற்குப்
பொருள் கொடுத்து பெண்ணை மணந்த நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
“………………….. குறுமகள்
நலஞ்சால் விழுப்பொருள் கலநிறை கொடுப்பினும்
பெறபெருங்குறையன்…………..” (அகம் 280 4-6)
பெண் வீட்டாற் வேண்டும் பெரும் பொருளை
மணமனால் தரவிலாத போது மணமகளின் வீட்டிலேயே தங்கியிருந்து அங்கேயே உழைத்து பொருளீட்டி
அந்த பெண்ணை திருமணம் செய்யும் முறையும் சங்க காலத்தில் இருந்தது.
“பெருநீர் குட்டம் புனையோடு புக்கும்
படுதிணம் பணிந்தன மடுத்தன மிருப்பிற்
தருகுவன் கொல்லோ தானே.” (அகம் 05 4-6)
ஒருதார
மணக்குடும்பம்
இணைக்குடும்ப வடிவத்திலிருந்து தோன்றிய
ஒரு தார மணமறை அணின் ஆமம்பட்ட அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டது.
தந்தையின் உடைமைகளுக்கான சாரிசுகளை நியமிப்பதற்கான
தந்தை முறையை அதாவது ஆண் மகனை அடிப்படையாகக் கொண்டது.
இணைக் குடும்பத்திலிருந்து ஒருதார மணம்
மேலும் இறுக்கத்தை ஏற்படுத்தியது.
இரு தரப்பினரும் (ஆண், பெண்) இஷ்டப்பட்ட
போது இதை இரத்து செய்ய முடியாது. ஆண் மட்டும் தான் ரத்த செய்து மனைவியைத் தள்ளிவிடும்
அதிகாரத்தைப் பெற்றிருந்தான்.
இந்த வகை திருமண முறையானது இயற்கையான
நிலைமைகளை அடிப்படையாகக் கொள்ளாமல் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டது.
குடும்பத்தில் ஆணின் ஆட்சி தனதெ எனக்
கூடிய குழந்தையைப் பெறுவது தனது சொத்துக்குரிய வாரிசாக வர விதியுள்ளவர்களைப் பெறுவதையே
இலட்சியமாகக் கொண்டிருந்தது.
தனிச் சொத்துடைமையை அடிப்படையாகக் கொண்டதாக,
ஆணுக்கான வாரிசுரிமையைக் கொண்டதாக, பெண்ணை ஆணின்
முழுக்கட்டுப்பாட்டில் வைத்து வீட்டில் அடைத்து வைக்கும் மணமுறையாக இன்றும் நீடித்து வருகிறது.
ü ü இளம் பெண்கள் நூல்
நூற்றல், நெசவு, துணி தைத்தல்,
ü சிறிதளவெ எழுதவும் படிக்கவும் கற்றல்,
ü தனிமையில் வைத்திருத்தல்,
ü பெண்களுடன் மட்டுமே உறவாடுதல்,
ü வீட்டின் பின்பகுதி அல்லது மாடியில் தனியறையில் தங்குதல்,
ü ஆண்களைக் காணாத அல்லது நெருங்க முடியாத நிலை,
ü ஆண்களைக் கண்டால் தன் அஇருப்பிடத்திற்குச் செல்ல வேண்டும்,
ü பெண் அடிமைகளுடன் மட்டுமே
வெளியல் வர வேண்டும்,
ü நாய்களும் அலிகளும் காவலாக வைக்கப்பட்டன.
பொது
மகளிர் முறை
பணத்துக்காக உடலுறவுக்கு உடன்படுதல் மதலில் ஒரு மதச் சடங்காக
இரந்தத. அந்த சடங்கு காதல்
தெய்வத்தின் ஆலயத்தில் நடைபெற்றத. அந்த பணமும் ஆலயத்தின்
கரூவூலத்திற்குச் சென்றது. பின்னர் எல்லாருடைய சார்பிலும் பெண் பூசாரிகள் மடடும்
அதைக் கடைப்படித்தார்கள். மற்ற மக்களினங்களுக்கிடையில் திருமணத்திற்கு முன்பு
இளம் பெண்களுக்குத் தரப்பட்டிருந்த உடலுறவுச் சுதந்திரத்திலிருந்து பொது மகளிர் முறை
தோன்றி வளர்ந்துள்ளது.
சங்க காலத்தில் காம
இன்பத்தை நுகர்தறுகுரிய இனிய பரத்தையிடம் ஆண்மகன்
செல்வது இயல்பான ஒன்று மனைவி தடுப்பதும் அவன் சென்று வந்து
தனிமையில் வருந்துவதுமான நிலையை சங்க இலக்கியங்கள் நமக்கு
எடுத்துரைக்கின்றன.
“ஊகொள் கல்லா மகளிர் தரத்தரப்
பரத்தமை தாங்கலோ வில்லென வறிதுநீ”
(கலி 9)
“நிரைதார்
மார்பன் நெருந லொருத்தியோடு
“வதுவை
யார்த்தல் வேண்டிப் புதுவதின்”
(அகம் 46)
உடன்
போக்குத் திருமணம்
ஒருவனுக்கு ஒருத்தி எனும் ஒருதார மண முறை பின்பற்றப்பட்ட
சமுதாயத்தில் காதல் பெண்டிருக்கான ஒரு உரிமையாக இருந்துள்ளது.
சங்க இலக்கிங்களில் பெரும்பான்மையான பாடல்கள்
காதல் சார்ந்த பாடல்களாகவும் உடன்போக்கு சார்ந்த பாடல்களாகவும் அமைந்துள்ளவை குறிப்பிடத்தக்கது.
“அறனில் அன்னை அருங்கடிப் படுப்பப்
பசலை யாகி விளிவது கொல்லோ”
(நற் 63)
“அருங்கடிப்
படுத்தனள் யாயே”
(அகம் 150)
“செல்வல்
கொண்க செறிந்தனள் யாயே”
(நற் 258)
முடிவுரை
மிக நீண்ட காலப்
பரப்பை உடைய சங்ககாலத்தில் தாய்
தலைமைச் சமுதாயக் குடும்பம் இரந்தது என்பதை மகன் தாய் வழி
இழைக்கப்பட்ட மரபை வெளிப்படுத்தும் புறப்
பாடல்கள் உறுதிப்படுத்துகின்றன.
தங்களுக்கான உரிமைகள் மாறிப்போய்விட்ட நிலையில் தந்தையரின் ஏற்பாட்டு திருமணங்கள் நிகழ்த்தப்பட்ட நிலையில் பெண்களுக்கான சுதந்திர செயற்பாடாக தங்களுக்கான துணைவரை தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கான உரிமை எடையததன காதல் சமுதாயத்தின் புறக் கூநாகத் தோன்றுகிறது.
திருமணம் குடிக்குள்ளும் குடிக்கு வெளியேயும் நடைப்பெற்றுள்ளது. குடிக்குள் நடைப்பெற்ற மணங்கள் காதல் வழிப்பட்டனவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
பரத்தமை பெண்களுக்கான பண்டையப் புணர்ச்சிச் சுதந்திரத்தின் தொடர்ச்சியாகத் தொடர்ந்திருந்த போதிலும் அது ஆண்களுக்குச் சாதகமான
உரிமையாகப் பரவலாக்கம் பெற்றிருந்தது.
பார்வை
நூல்கள்
1. பெ. மாதையன் - சங்க
இலக்கியத்தில் குடும்பம்
2. பி.ஏங்கல்ஸ் - தனிச்சொத்து
குடும்பம் அரசு ஆகியவற்றின் தோற்றம்
3. ராகுல்ஜி - வால்ஹா முதல் கங்கை வரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக