புதன், 20 ஜனவரி, 2016

வேந்தர்களின் வஞ்சினம்

                   

வேந்தர்களின் வஞ்சினம்

முன்னுரை

        சங்கப் புறநூல்களுள் ஒன்றான புறநானூற்றில் பண்டையத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறை, போர், வீரம், பண்பாடு போன்றவற்றைப் பற்றிய செய்திகள் விளங்கக் கிடைக்கின்றன. ஆக்கால மக்களின் வாழ்க்கை முறையினைத் தன்னகத்தே கொண்டுள்ளதாகக் கருதப்படுகின்ற இவ்விலக்கியத்தினுள்ளே புலவர்கள் மடடுமின்றி மன்னர்கள் சிலரும் பாடல்கள் பாடியுள்ளமை நம் கவனத்தை ஈர்க்கும் விதமாய் உள்ளது. இக்கட்டுரை புறநானூற்றில் காணப்படும் வஞ்சினம் குறித்த செய்திகளை ஆராய முற்படுகிறது. புறத்திணைகளுள் ஒன்றாக வஞ்சித் திணைஉள்ளது. இவ்வஞ்சித் திணை நாட்டைக் கைப்பற்றும் நோக்கோடு ஒரு மன்னன் வேறொரு நாட்டின் மீது படையெடுத்துச் செல்வதைக் குறித்துப் பேசும். இதனைத் தொல்காப்பியரும்

“எஞ்சா மண்நசை வேந்தனை வேந்தன்

அஞ்சுதகத் தலைச்சென்று அடல்குறித் தன்றே”

ஏனக் குறித்துள்ளார். இவ்வாறு படையெடுத்து வரும் மன்னன் மீது சினம் கொண்டு எதிர் மன்னனால் உரைக்கப்படுபவையே வஞ்சினமாக அமைகிறது.

புறநானூற்றில் மன்னர்களால் பாடப்பட்டவையாக மூன்று வஞ்சினப் பாடல்கள் அமைந்துள்ளன. இப்பாடல்களின் வழியாக வெளிப்படும் மன்னர்களின் வஞ்சினமானது தன் நாட்டின் மீது படையெடுத்துவரும் வேற்று நாட்டு மன்னர்களை அழிப்பேன் என்று சூளுரைப்பதோடு மன்னுடைய நாட்டு மக்களையும், போர் வீரர்களையும் போருக்குப் புறப்பட்டு வரும்படி அழைக்கும் பிரச்சாரப் பண்பிணையே மையமாகக் கொண்டுள்ளது. ஏன்ற கருதுகோளினை இக்கட்டுரையானது முன்னெடுத்துச் செல்கிறது.

வஞ்சினம் பாடியோர்

புறானூற்றில் வஞ்சினம் பாடிய மன்னர்களான

1.   ஓல்லையூர் தந்த பூதப்பாண்டியன்

2.   பாண்டியன் நெடுஞ்செழியன்

3.   சோழன் நலங்கிள்ளி

ஆகிய மூன்று மன்னர்களின் வஞ்சினப் பாடல்கள் குறித்து இனிக் காண்போம்.

பாடுபொருட்கள்

வஞ்சினம் பாடிய மூன்று மன்னர்களின் பாடு பொருட்களையும் தொகுத்து நோக்கும் போது  இருநிலைகள் அமைகின்றன்ன.

1.       தன்னிலைக் கூறல்

2.       மக்களின் மீள்ள கருணை

3.       தன்னிலைக் கூறல்

தன்னிலைக் கூறலின் முக்கிய அடிக்கருத்துக்களை நோக்கும் போது தான் உயர்ந்த பண்பினைக் கொண்டவன் அறத்தில் சிறந்தூக விளங்குபவன் என்பன போன்ற கருத்து நிலைகளிலேயே பாடப்பட்டுள்ளன.

ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன் தனது வஞ்சினத்தில் எதிர்களைத் தான் வெலவ்லடப்hவிட்டால் சிறந்த தன் மனைவியைப் பிரிந்த குற்றத்திற்கு உள்ளாவேன் என்றும் கண்ணைப் போன்ற நட்பு கொண்டவர்களான மாவன், மன்னர்களுடன் நகைத்துரையாடும் வாய்ப்பைத் தவறவிட்டடிகுற்றத்திற்க ஆட்படுவேன் என்றும் குறித்துள்ளதன்வழி, அவர்களுடன் தனக்குள்ள நட்பினை மடடுமல்லாமல் அவர்களின் உதவியும் தனக்குத் தேவைப்படுகிறது. அவர்கள் தனக்கு உதவ வேண்டும் என்பதையும் மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளான் என்று எண்ணுவதில் தவறில்லை. எதிரிகளைக் கொல்லாவிட்டால் ளமான நிலப்பகுதியை ஆளும் நிலையிலிருந்து வளமற்ற நிலப்பகுதியை ஆளும் இழிநிலை தனக்கு வந்தடையும். தன் மக்களும் அவ்வாறே துன்பப்பட நேரிடும் என்பதைக் குறிக்கும் விதமாக,

 

“தென்புலம் காவலின் ஒரீஇ, பிறர்

வன்புலம் காவலின் மாறியான் பிறக்கே” (புறம்:71,18-19)

என்ற வரிகளின் மூலம் உணர்த்துகின்றான்.

தலையாலங்கானத்து செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் தனது வஞ்சினத்தில் தான் எதிரியைக் கொல்லாவிட்டால் மாங்குடி மருதன் முதலான புலவர்கள் தன்னைப் பாடாமல் நீங்கிச் செல்கின்ற இழிநிலையை அடைவேன் என்பதன்வழி, சிறப்பான ஆட்சி புரிந்து வருவதால் பெரும் புலவர்களும் தன்னைப் போற்றிப் புகழ்கின்றனர் என்று குறிப்பால் வெளிப்படுத்தியுள்ளான்.

சோழன் நலங்கிள்ளி, தன் மனைவியைத் தவிர வேறொரு பெண்ணுடனும் கூடாத நற்பண்பினை உடையவன் தான் என்னும் பொருள்பட,

“தீதுஇல் நெஞ்சத்துக் காதல் கொள்ளாப்

பல் இருங் கூந்தல் மகளிர்

ஒல்லா முயங்கிடைக் குழைக, என் தாரே” (புறம்.73, 12-14)

என்று தன்னைத்தானே தன் ஒழுக்கம் குறித்து மறைமுகமாகப் புகழ்ந்துள்ளமை ஒப்புநோக்கத்தக்கது.

மேற்கண்டவற்றின்வழி, தான் உயர்ந்த பண்பினன் என்ற கருத்து நிலையை நாட்டு மக்களுக்கு ஏற்படுத்த வேண்டி, மன்னர்கள் தங்களது வஞ்சினப் பாடல்களைக் கட்டமைத்துள்ளனர் என்பதை உணர முடிகிறது. தங்கள் நற்பண்பினைத் தாங்களாகவே நிறுவிக் கொள்ள வேண்டிய தேவை இவர்களுக்கு ஏன் வந்தது என்பதையும் நாம் எண்ணிப்பார்த்தல் வேண்டும்.

மக்களின் மீள்ள கருணை

ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன் எதிரி மன்னனிடம் தான் போரிட்டுத் தோற்றால் அறவழியில் ஆட்சிபுரியாத, திறமை இல்லாத ஒருவன் கொடுங்கோல் ஆட்சி புரிவான் என்ற கருத்தினை மக்கள் மனதில் புகுத்த வேண்டும் என்ற நோக்கில்,

 

“அறன்நிலை திரியா அன்பின் அவையத்து

திறன்இல் ஒருவனை நாட்டி, முறைதிரிந்து

மெலிகோல் செய்தேன் ஆகுக………” (புறம்: 71, 7-9)

என்ற வரிகளின் மூலம் உய்த்துணர முடிகிறது.

இதைப்போன்றே தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனும் தன்னுடைய ஆட்சி மட்டுமே செங்கோலாட்சி, பிறருடைய ஆட்சி நாட்டில் ஏற்படுமாயின் அது கடுங்கோலாட்சியாகவே அமையும் என்னும் பொருள்பட அமைந்தனவாக,

“என்நிழல் வாழ்நர் செந்நிழல் காணாதது

கொடியன் எம் இறை எனக் கண்ணீர் பரப்பி”(புறம் : 72, 10-11)

மேற்கண்ட வரிகள் அமைந்துள்ளமையைக் காண்க. மேலும், மக்களுக்கு தான் எப்போதும் வாரி வழங்குபவன், வறுமையைப் போக்குபவன் என்ற உள்ளர்த்தம் கொண்டவையாக,

“புரப்போர் பன் கண் கூர

இரப்போர்க்கு ஈயா இன்மையான் உரவே” (புறம் 72, 17-18)

என்ற வரிகள் அமந்துள்ளன.

சோழன் நலங்கிள்ளியும் தன் நாட்டில் உள்ள மக்கள் வீரமானவர்கள். தனக்காக அஃங்சாமல் போரிடக்கூடிய பண்பினைப் பெற்றவர்கள். அவர்களைப் பற்றி அறியாதவனே இந்நாட்டின் மீது போர்தொடுப்பான் என்பதாக,

“………… இந்நிலத்து

ஆற்றல் உடையோர் ஆற்றல் போற்றாது, என்

உள்ளம் எள்ளிய மடவோன் ……(புறம் : 73, 4-6)

குறித்துச் சென்றுள்ளமை கவனிக்கத்தக்கது.

மேற்கண்டவற்றைத் தொகுத்து நோக்கும் போது இம்மூன்று மன்னர்களும் தங்களின் வஞ்சினப் பாடல்கள் வழி மக்கள் மீது தங்களுக்கு அளவற்ற அன்பும் பற்றும் உள்ளதாகவும், தங்கள் ஆட்சியில் மக்கள் நிம்மதியாக வாழ்வதாகவும் கட்டமைத்துள்ள நிலையினை உய்த்துணர முடிகிறது.

முடியுரை

பொதுவாக அரசின் மேலாதிக்கத்தை வலியுறுத்தப் புலவர்களே பயன்படுத்தப்பட்டனர். ஆனால் இங்கு மன்னர்களே தங்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். தனக்கும், தன்னுடைய ஆட்சிக்கும் செருக்கடி ஏற்படும் போது மட்டுமே இத்தகைய வஞ்சினப் பாடல்கள் பாடப்பட்டுள்ளன. குறிப்பாக, நாட்டு மக்களையும் போர் வீரர்களையும் போருக்கு ஆயத்தமாகும்படி அழைப்பு விடுக்கின்ற பிரச்சாரப் பண்பே இதன் மையமாக அமைவதனை அறிய முடிகிறது. போருக்கு முன் பாடப்படுகின்ற ஒருவகைப் பாடலாக இவ்வஞ்சினப் பாடல்களைக் கருதலாம். தேர்தல், மாநாடு போன்றவற்றிற்குத் தங்களது தொண்டர்களைத் தயார் படுத்த வேண்டி அரசியல் கட்சித் தலைவர்கள் அறிக்கை வெளியிடும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. இதனை வஞ்சினப் பாடல்களின் மரபுத் தொடர்ச்சி எனலாம்.

 

ச.பாலசுப்பிரமணியன்

கருத்துகள் இல்லை: