சனி, 12 செப்டம்பர், 2015

கணினி வழி தமிழ்மொழி மேம்பாடு

‘‘கணினி வழி தமிழ்மொழி மேம்பாடு’’
முனைவர் வீ.உதயகுமார் 
விரிவுரையாளர்

மாறிவரும் உலகில் நாள்தோறும் ஏற்படும் மாற்றங்களில் அனைத்தும் அண்மையாய் உணர வைக்கிறது. வளர்ந்து வரும் தொழில் நுட்பங்கள் தகவல் நுட்பங்கள் தகவல் தொழில் நுட்பத் துறையை மாற்றியமைத்து வருகின்றன. இந்த மாற்றங்களை தமிழ்மொழியிலும் மாற்றவேண்டும். தமிழில் மொழியில் கணினி வழி உள்ள குறைபாடுகளை என் பார்வையில் இருந்து எடுத்துரைக்கப்படுகின்றன. உலகு தழுவிய நிலையில் வாழும் தமிழ் மக்களும் தமிழில் மீது ஈடுபாடு கொண்டுள்ள பிற மொழியினரும் தமிழ் மொழியையும் அறிவியல், தொழில் நுட்பம், கணினித் தமிழ் மற்றும் தமிழ் பயன்பாடு மென்பொருள்களைக் கற்கவும் தமிழர் வரலாறு, இலக்கணம், இலக்கியம், கலை, பண்பாடு போன்றவற்றைப் பற்றி அறிந்து கொள்வதறகான வாய்ப்புகளை கணினி வழி உருவாக்கி கொடுப்பதன் மூலம் தமிழ் மொழி மேம்பாடு அடைகின்றன.

கணினி வழி தமிழில் உள்ள குறைபாடுகள்
உலகளாவிய அளவில் உள்ள தமிழ் மக்கள் தமிழ் மொழியில் நாள்தோறும் வெளிவரும் நூல்களைப் பல நாடுகளில் வாழும் தமிழர்கள் மற்றும் தமிழ் ஆர்வளர்கள்  இணையத்தின் மூலம் நூல்களைப் பெற்று படிக்கும் வாய்ப்பு இல்லாமல் இருக்கிறது.
            அதனை நிவர்த்தி செய்வதற்கு பதிப்பகங்களில் வெளிவரும் நூல்களை அவர்கள் பதிப்பக வலைதளங்களிலோ அல்லது எழுத்தாளர் வலைதளங்களிலோ நூல்களை விலைக்கு வாங்கி pdf -ஆக பதிவு இறக்கம் செய்து கொள்ளும் வசதி இருந்தால் உலகமக்கள் நூல்களை இணையதளங்களில் மூலம் பெற்று பயனடைவார்கள். இதனால் பல நாடுகளில் இருக்கும் தமிழர்களால் கணினி வழி தமிழ் மொழி மேம்பாடு அடையும்.
இணையதளங்களில் தமிழ் font ஒவ்வொரு வலைதளங்களிலும் வேறு வேறாக பயன்படுத்தப்படுகிறது. அதனால் புதிய வளைதளங்களுக்கு சென்று பார்க்கும் போது புதிய font- ஐ பதிவு இறக்கம் செய்து பார்க்கும் சூழ்நிலை ஏற்படுவதால் எல்லாராலும் பிற வலைதளங்களை பயனபடுத்தும் வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது.
வணிக மொழியான ஆங்கிலம் ஒரே font -ஆக இணையதளங்களில் பயன்படுத்தப்படுவது போன்று தமிழிலும் ஒரே font -ஆக இணையதளங்களில்  பயன்படுத்தும் போது அனைவரும் அனைத்துவிதமான செய்திகளையும் தெரிந்து கொள்ள முடியும்.
உலக அளவில் எல்லா கணினியிலும் Word File Open செய்தவுடன் Arial font-ல் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யப்படுகிறது. அது போன்று தமிழ் மொழியில் உலக அளவில் எல்லாராலும் ஒரே font-ஐ தேர்வு செய்து தட்டச்சு செய்ய முடியவில்லை.
தமிழ் தட்டச்சு செய்ய வேண்டும் என்றால் பல்வேறு தமிழ் தட்டச்சு மென்பொருள்கள் உள்ளன. அவற்றுள் நமக்கு தெரிந்த தமிழ் தட்டச்சு மென்பொருளைத் தேர்வு செய்து தட்டச்சு செய்ய வேண்டிய சூழல் உள்ளது. வேறு வேறு font -ல் தட்டச்சு செய்வதால் பல செய்திகளை எல்லாராலும் தெரிந்து கொள்ள முடியவில்லை.  இதனை சரிசெய்ய ஒரே விதமான தமிழ் font -ஐ உருவாக்கி அதனை (Word 2003, Word 2007, Word 2010 ) Word Software -உடன் இணைப்பதன் மூலம் எல்லோரும் ஒரே தமிழ் font -ஐ பயன் படுத்த வாய்ப்பு ஏற்படும். இது போன்ற மாற்றம் ஏப்பட்டால் ஒரே font , ஒரே மொழி என்று  உருவாகி அனைத்து தமிழர்களும் ஒரே விதமான தமிழ் தட்டச்சு பயன் படுத்தும் போது அனைவரின் கருத்தும் எல்லோரிடமும் சென்று சேரும்.
            தமிழ் வளைப்பின்னல்களில்  (website) முழுவதும் தமிழில் எழுதப்படுகின்றன. வளைப்பின்னல் முழுவதும் தமிழில் எழுதப்படுவதன் மூலம் தமிழ் படிக்கத் தெரிந்தவர்கள் மட்டும் வளைப்பின்னலை பயன்படுத்துகின்றனர். தமிழ் படிக்க தெரியாத மற்ற மொழி தெரிந்தவர்கள் வளைப்பின்னளை பயன்படுத்த முடியாமலும் செய்திகளை தெரிந்து கொள்ள முடியாமலும் போய்விடுகிறது.
            இதனை நீக்குவதற்கு தமிழ் வளைப்பின்னல்களில் தமிழில் எழுதும் போது அதற்கு அருகில் வணிக மொழியான ஆங்கில மொழியில் குறிப்பிடும் போது பிற மொழி பேசுபவர்களும் எளிதாக படித்து தெரிந்து கொள்ள வாய்பாக அமையும்.
            தமிழ் வளைப்பின்னல்களில் கவிதை, கட்டுரை, நாவல், நகைச்சுவை, எழுத்தாளர் சுய விபரம், பல்வேறு நூல்களை தமிழில் உள்ளவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தருவதன் மூலம் பிறமொழி பேசுபவர்கள் ஆர்வத்துடன் தமிழ் வளைப்பின்னலை பயன்படுத்த முன் வருவார்கள். இதன் மூலம் கணினி வழி தமிழ் மொழி மேம்பாடும்.
            மின் அஞ்சல் (e-mail)  மூலம் செய்திகள் மற்றும் புகைப்படங்களை குறிப்பிட்ட அளவில் மட்டுமே அனுப்ப முடியும். அவை unlimited ஆக இருந்தால் செய்திகள் பரிமாற்றுவது இன்னும் எளிமையாக இருக்கும்.
            மின் அஞ்சல் மூலம் (Software) மென்பொருள்களை அனுப்பமுடிய வில்லை. தகவல்களைச் சொல்லி தெரிவதை விட  அதை மென்பொருள் மூலம் பயன்படுத்தி தெரிந்து கொள்ளும் பொழுது தானாகவே அதை பற்றி உணரமுடியும். மென்பொருளை மின் அஞ்சல் மூலம் அனுப்பும் வாய்ப்பு இருந்தால் இன்னும் தகவல் மிக வேகமாக பரிமாற்றிக் கொள்ளவும் மென்பொருளை விரிவுபடுத்தவும்  முடியும்.
நான் பார்த்தவரை எந்த ஒரு வளைப்பின்னல்களிலும் தமிழில் கொடுக்கப்படும் செய்திகளை மொழிபெயர்த்து அதன் அருகில் கொடுக்கப்படுவது கிடையாது. தமிழர்கலால் தொடங்கப்படும் வளைப்பின்னல்களில் முழுக்க முழுக்க தமிழிலே இருக்கம் சிரிதும் ஆங்கிலம் கலக்காமல் இருப்பார்கள் இப்படி இருப்பதால் என் பயனை அடைமுடியும் ஆங்கிலம் தமிழ் என்று மொழிபெயர்க்கப்படும் போது தான் பிற மொழியினரும் நம் தமிழ் மொழியின் பழமையையும் சிறப்பையும் உணரமுடியும். 
தமிழ் நூல்களை Scan செய்யப்பட்ட பக்கங்களை அப்படியே Word file -ஆக மாற்றும் TamilOCR  என்ற மென்பொருள் மூலம் மாற்றும் வசதி இருந்தாலும் அது ஆங்கிலத்திற்கு 100% சரியாக இருக்கிறது. ஆனால் தமிழில் அப்படி Scan செய்யப்பட்ட பக்கங்களை முழுவதும் சராயாக மாற்றிதருவது கிடையாது சில தவறுகள் ஏற்படுகின்றன. அவற்றை முற்றிலும் சரிசெய்யப்படும் போது பார்வையற்றவர்களுக்கு அது ஒரு வர பிரசாதம் போன்றது. எனவே அவை சரிசெய்யப்பட வேண்டும்.
தமிழில் இல்லாத மற்ற வளைப்பின்னல்களில் இருக்கும் அறிவியல் செய்திகளை நம்முடைய மொழியில் மொழிபெயர்த்து தருதல் வேண்டும்
‘‘சென்றிடு வீர்எட்டுத் திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர்’’
என்றார் பாரதி.
தமிழில் இல்லாத பிற மொழி நூல்களை தமிழ் மொழிக்கு மொழிபெயர்த்து தருதல் வேண்டும்.
          ‘‘தமிழிலிலாப் பிற மொழிநூல் அனைத்தும்  நல்ல
          தமிழாக்கி வாசதிக்கத் தருதல் வேண்டும்’’
என்றார் பாரதிதாசன்.
தமிழ் மொழி அல்லது பிற மொழி ஆர்வளர்கள் தங்களது கருத்துகளையும் தகவல்களையும் படைப்புகளையும் ஒரு சில  வளைப்பின்னலில் பதிவு செய்யும் வாய்ப்பு உள்ளது. அவை அனைத்து வளைப்பின்னல்களிலும் இருக்க வேண்டும் அப்படி இருக்கும் பட்சத்தில் எல்லோரு அவர்கள் கருத்தை பதிவு செய்வார்கள் அதன் மூலம் நம்முடைய வளைதலங்களை மேலும் சிறப்பாக மாற்றி அமைக்க முடியும்.
பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் தங்களது படைப்புகளை பதிவு செய்வதற்கான இடம் இல்லாமல் அலைந்து திருகின்றனர். இது போன்ற வசதிகள் செய்து தரும்போது மாணவர்களின் சிந்தனை ஆற்றல் விரிவடையும்.
 உலக அளவில் இருக்கு தமிழர்கள் கணினி மூலம் ஒன்று இணைக்க வேண்டும். அதற்கு ஒரு தனி வளைப்பின்னல் உருவாக்க வேண்டும் அவற்றில் கருத்து சுதந்திரம் கொடுக்கப்பட்டு அனைவரின்  கருத்துக்களைப் பதிவு செய்ய வாய்ப்பு ஏற்படுத்தி தரவேண்டும். அப்படி ஒன்று இருந்தால் அனைத்து தமிழர்களும் ஒரு ‘‘கணினி தமிழ் குடும்பம்’’ ஆக மாற வாய்ப்பு உள்ளது. இந்த குறைபாடுகளை நிக்கினால் கணினி வழி தமிழ் மொழியும் மேம்பாடு அடையும் அவற்றுடன் தமிழர்களும் உயவடைவார்கள்.


கருத்துகள் இல்லை: